Tamilstar
Health

முட்டை அதிகம் சாப்பிடுபவர்களா? அப்ப கண்டிப்பா இதை பாருங்க..

Do you eat a lot of eggs

முட்டை அதிகமாக சாப்பிடும் போது நமக்கு தீமைகளையும் ஏற்படுத்தும்.

பொதுவாகவே அன்றாடம் உண்ணும் உணவுகளில் முட்டையை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஏனெனில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியம் என அனைவரும் அறிந்ததே. ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அது நம் உடலுக்கு என்னென்ன தீங்கு விளைவிக்கும் என்று பார்க்கலாம்.

முட்டையில் புரதம் வைட்டமின் டி வைட்டமின் பி12 போன்ற கொழுப்பு நிறைந்த சத்துக்கள் அதிகம் உள்ளது. முட்டையை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு வர அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மேலும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி மலச்சிக்கல் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனையை உண்டாக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை குறைவாக சேர்த்துக் கொள்வது சிறந்தது.

இதனைத் தொடர்ந்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகமாக முட்டை சாப்பிடக் கூடாது. இது உடல் எடையை அதிகரிக்க செய்யும். மேலும் நீரிழிவு நோயாளிகள் முட்டையை சாப்பிடக்கூடாது. ஏனெனில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். எனவே முட்டையை தவிர்ப்பது சிறந்தது.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும் அது போல நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் அளவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.