Do these people get salaries in crores? Thaman shares his pain!
இவர்களுக்கு கோடியில் சம்பளமா? வேதனையை பகிர்ந்த தமன்!
தமிழ்த்திரையில் ‘மயக்கம் என்ன’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ரஜினியின் வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் கமிட் ஆகி வருகிறார். அவ்வகையில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.
இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைப்பில் ‘வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது, அகண்டா 2, தி ராஜா சாப் போன்ற தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், தமன் தமிழ்-தெலுங்கு சினிமா குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். ஆனால், அவர்கள் தெலுங்கு படங்களில் வேலை செய்வது விருப்பத்தால் அல்ல பணத்திற்காகதான்’ என தமன் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து அனிருத் விளக்கம் என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…