Distributor Warning on Beast Movie Trailer
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார்.
பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி, யோகி பாபு என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இது படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில் யூட்யூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வர ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட வினியோகஸ்தர்கள் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது டீஸ்ட் படத்தின் டிரெய்லரை திரையரங்குகளில் இலவசமாக வெளியிட்டதை பற்றி பேசியுள்ளார்.
இவ்வாறு செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே ஒரு முறை இணைந்த கைகள் திரைப்படம் வெளியானபோது அளவுக்கதிகமான கூட்டத்தால் சிக்கி 2 ரசிகர்கள் உயிரிழந்தனர். இதனால் அந்த திரையரங்கத்தின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.
பீஸ்ட் படத்தின் டிரைலர் இலவசமாக வெளியிடுவதால் 500 பேர் கூட வேண்டிய திரை அரங்குகளில் 2000 பேர் கூடுவார்கள். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அந்தத் திரையரங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டிய சிக்கல் வரும். இதனால் பெரிய நடிகர்களின் டிரெய்லரை இலவசமாக வெளியிடுவதை தடுக்கலாம். மேலும் திரையரங்குகளுக்கு வெளியே எல்இடி ஸ்கிரீனில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…