Director TP Gajendran's daughter robbed shop
பிரபல தமிழ் சினிமா பட டைரக்டர் டி.பி.கஜேந்திரன். இவரது மகள் முத்துலட்சுமி. இவர் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் “சூப்பர் மார்க்கெட்” கடை நடத்தி வருகிறார். காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ், பூஸ்ட், விலை உயர்ந்த சாக்லேட், பிஸ்கட் பாக்கெட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், ரூ.15ஆயிரம் ரொக்கம், கேமரா டி.வி.ஆர் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை காண பொறுத்தப்பட்டு இருந்த பெரிய எல்.இ.டி டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளை கும்பல் மூட்டை கட்டி அள்ளி சென்றது தெரியவந்தது.
அதே பகுதி அபுசாலி சாலையில் அடுத்தடுத்து உள்ள அரிசி மண்டி, மெடிக்கல் கடையையும் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அரிசி கடை கல்லாப்பெட்டியில் பணம் ஏதும் இல்லாததால் ஆத்திரத்தில் அங்கிருந்த அரிசி மூட்டைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு நாசமாக்கினர். மெடிக்கல் கடை கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.700 ரொக்கத்தையும் சுருட்டி சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் முககவசம் மற்றும் குல்லா அணிந்து வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் சேவியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராணியிடம்…