‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க…. இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க – ஷங்கர் காட்டம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் என பலர் நடித்து வந்தனர். இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, பின்னர் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்தியதாகவும், ஏற்கனவே 400 கோடியில் இருந்து 220 கோடியாக குறைக்கப்பட்ட பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

தற்போது மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளில் தளர்வு அறிவித்திருக்கும் நிலையிலும் இந்தியன் 2 படத்தின் பணிகளை துவங்க தயாரிப்பு நிறுவனம் முன்வரவில்லை.

இதனால் கோபமடைந்த ஷங்கர் படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படத்தின் பணிகளை செய்ய விடுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தயாரிப்பு தரப்பு அதனை மறுத்துள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் 100 பேர் என்ற எண்ணிக்கை இந்தியன் 2 மாதிரியான பிரம்மாண்ட படங்களுக்கு போதாது எனவும், குறைந்தபட்சம் 500 பேர் தேவைப்படுவதால் படப்பிடிப்பை தற்போது தொடங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Suresh

Recent Posts

காலம் பேசாது.. நிச்சயம் களத்தில் சந்திப்போம்…ரஜினி ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்..!

மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

1 hour ago

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட விஜய் சேதுபதி..!

ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…

2 hours ago

விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, சோகத்தில் மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்…!

மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

2 hours ago

Pulippu – Lyric Video

https://youtu.be/PmoX7bgMI7U?si=gW0s3jfWzbSdBeka

2 hours ago

HotstarSpecials Muthu Engira Kaattaan Trailer

https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm

3 hours ago

Loveah Sollitalea Music Video

https://youtu.be/_6NkHzf4zfM?si=SaIPVr1rxm8ACEoY

3 hours ago