Director Ram and Nivin Pauly's first movie update
ஜீவா, அஞ்சலி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதையடுத்து தங்கமீன்கள், தரமணி, பேரன்பு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். குறிப்பாக இவர் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான ‘தங்கமீன்கள்’ திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.
இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதன்படி அப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அஞ்சலியும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராம் – நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…