Didn't give a chance, gave life ... Famous actor who praised Dhanush
தனுஷ் ரசிகர் ஒருவர் உணவகத் திறப்பு விழா ஒன்றை நடத்தினார். இதில் நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ”தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.
ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.
நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.
இவ்வாறு ரோபோ சங்கர் கூறினார்.
மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…