விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Suresh

Recent Posts

I,Nobody Release Teaser

I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy

11 hours ago

Arulvaan Official Trailer

Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer

11 hours ago

Malligai Mottu Promo Song

Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…

11 hours ago

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

17 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

17 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

17 hours ago