Dhanush's Captain Miller again objected to the shoot
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது. பின்னர் முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய வெடிகளை வைத்தும், துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளை கேப்டன் மில்லர் படக்குழுவினர் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறுவதாக குற்றம்சாட்டும் இளைஞர்கள், சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் கொண்டாடும் வேளையில், வன உயிரினங்களை அச்சுறுத்தும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…