Dhanush with Goli Soda
நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டு வாரம் அமெரிக்காவில் ஓய்வெடுக்க உள்ள தனுஷ், அதன்பின் சென்னை திரும்ப இருக்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் குவிந்து உள்ளது.
Devatha Odittalaa Lyrical Video | Marriage Story | Sunil Dev | Saran Raghavan | Sathyaprakash…
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழ் திரையுலகின் ஜாம்பவானுமான எம்ஜிஆரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் திரைப்படம் உருவாகி…
நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட்…
பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்தக் கடினமான காலகட்டத்தில்,…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், தனது மனைவி நர்மதாவுடன் நான்காம் ஆண்டு திருமண…