தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு திட்டமிடப்பட்ட நாடகம்?: ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்க டுவிட்டர் பதிவு

தமிழ் திரைஉலகில் இருந்து பாலிவுட்டிற்குச் செல்லும் நடிகர்களை அவ்வளவு சீக்கிரம் பாலிவுட் திரைஉலகினர் ஏற்றுக்கொள்வதில்லை. ரஜினி, கமல் இருவருமே போராடிப் பார்த்துத் திரும்பியவர்கள் தான்.

ஆனால் தனுஷ் மட்டும் அதில் விதிவிலக்காக இருக்கிறார். அவரது அசாத்திய நடிப்பு திறமை பாலிவுட்டில் அவருக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அட்ராங்கி ரே படம் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து ரசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மருமகனின் பாலிவுட் பட வாய்ப்புகளை பார்த்து ரஜினியே சந்தோ‌ஷத்தில் இருந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் இந்த பிரிவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரஜினிக்கு தனது மகள்கள் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்கிற விருப்பம் தான் எப்போதும் உண்டு. சிறிய மகள் சவுந்தர்யா படத்தயாரிப்பில் ஈடுபட்ட போது, தயாரிப்புப் பணிகளைக் கவனிக்கத் தனியாக ஆக்கர் ஸ்டுடியோ என்ற அலுவலகத்தைத் திறந்தார். திரைப்பட பணிகள் தவிர திரை உலக நண்பர்கள் அங்கு ஒன்று சேர ஆரம்பித்தனர்.

முதலில் கதை விவாதங்கள் நடந்தன. பிறகு உற்சாகக் கொண்டாட்டம் நடந்தது. இதனால் சவுந்தர்யா பெரும்பாலும் ஆக்கர் ஸ்டுடியோவில்தான் இருந்தார். இது ரஜினிக்குத் தெரியவர, கண்டிப்புடன் ஆக்கர் ஸ்டுடியோவை மூட உத்தரவிட்டார். ஸ்டுடியோ மூடப்பட்டது.

அந்த நேரத்தில் ஒரு பொது விழாவில் கலந்து கொண்ட ரஜினி, என் மகள்கள் திருமண வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்தால் போதும், படம் எடுத்து நீங்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டாம். இருக்கும் பணத்தைக் காப்பாற்றிக்கொண்டால் போதும். எனக்கு ஒரு பேரக் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனம் திறந்து பேசினார்.

இந்த பேச்சு நேரடியாக சவுந்தர்யாவைக் கண்டிப்பதாகவே இருந்தது. இதன் பிறகு சவுந்தர்யாவும் தன் போக்கை மாற்றிக்கொண்டு அமைதியானார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா புதிய படவேலையில் இறங்கினார். இதற்காகத் தனி அலுவலகத்தையும் திறந்தார். இவர் ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற படங்களை எடுத்திருக்கிறார். இதனால் மீண்டும் சின்சியராக படத்தை எடுத்து முடிப்பார் என்பதே குடும்பத்தினர் நம்பிக்கை.

ஆனால் சில மாதங்களாகவே ஐஸ்வர்யாவின் போக்கும் பழக்கமும் திருப்தியாக இல்லை. இந்த தகவல் கேள்விப்பட்டு ரஜினிக்கு மீண்டும் கோபம் ஏற்பட்டது. குடும்பத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவுக்குப் புத்திமதி சொன்னார்.

ஆனால் ஐஸ்வர்யா கேட்பதாக இல்லை. தனுசும் பாலிவுட் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, ஐஸ்வர்யாவுக்கு ஒரு ஷாக் கொடுக்க நினைத்த குடும்பத்தினர் “பிரிவு” என்ற ஒரு முடிவை தனுசை வைத்து அறிவிக்க வைத்திருக்கிறார்கள். அதாவது தனுஷ் மூலம் சிறு பிரிவு நாடகம் நடத்தப்பட்டதாக திரை உலகில் பேசப்படுகிறது. இந்த தகவல் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய அதிர்ச்சி தகவல் தான்.

இது ஒருபக்கம் இருக்க, தனுஷ் இந்த முடிவை விலக்கிக்கொள்ள திரையுலகினர் பலர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தொழில் முறையில் தனுசிற்கு எதிரும் புதிருமாகப் பார்க்கப்பட்டு வரும் சிம்புகூட இந்த வி‌ஷயத்தில் தனுசை தொடர்பு கொண்டு விவாகரத்து முடிவைக் கைவிடும்படி கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் மனம் மாறி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருவருக்குமான பிரிவு என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது என்கிறார்கள். காரணம் சொத்துக்கள்.

அவற்றை எல்லாம் மாற்றியெழுதுவதென்பது இப்போதைக்கு முடியாத காரியம் என்கிறார்கள். இந்த வி‌ஷயமும் தனுசின் மனதை மாற்றி இருக்கிறது என்கிறார்கள்.

இதனால் தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு விரைவில் சுமூக முடிவுக்கு வந்து விடும் என்கிறார்கள்.

Suresh

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

1 day ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

1 day ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

1 day ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 day ago