desingu-raja-2 movie first-look-poster-release
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களின் கதையை மையமாக வைத்து காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தை மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…