பிரபல பின்னணி பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்

பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்
பாடகர் கேகே
கொல்கத்தா:

இந்தியத் திரையுலகின் பல்மொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை அவர் பாடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே, தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார்.

மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார்.

காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க),) உள்ளிட்ட அவர் பாடிய பாடல்கள் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவை…

இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார்.

அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

முன்னாக அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது.

பாடகர் கேகே திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது.

அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Death of famous playback singer KK
jothika lakshu

Recent Posts

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

14 hours ago

அஜித் 64 படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்..!

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…

16 hours ago

குஷி படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…

16 hours ago

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்..H.வினோத் கொடுத்த தரமான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

21 hours ago

வருத்தப்பட்ட கிரிஷ் பாட்டி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…

23 hours ago

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி, வலியில் துடிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

23 hours ago