dandupalayam movie review
சுமன் ரங்கநாதன் எட்டு பேர் கொண்ட கும்பலை நடத்தும் ஒரு பயங்கரமான குற்றவாளி. மக்களை சித்திரவதை செய்து, அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக பணம், ஆபரணங்கள் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைப் பறிப்பது மட்டுமே அவளுடைய ஒரே குறிக்கோள். எனவே, அவர்களை பிடிக்க, டைகர் வெங்கட் என்ற சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். டைகர் வெங்கட் இந்த கும்பலை எவ்வாறு பிடித்தார்? அவர் பட்ட இன்னல்கள் என்ன? இந்த கும்பலின் கொலை, கொள்ளையிற்கு பின் யார் இருக்கிறார்? ஏன் இதை இவர்கள் செய்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்சுமன் ரங்கநாதன் சிறப்பாக நடித்துள்ளார், கொடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியுள்ளார். டயலாக்குகளை அந்த ஊர் ஸ்லாங்கில் அழகாக பேசியுள்ளார். வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் சில காட்சிகளில் வந்தாலும் அவர்களது பங்கை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர்.
கும்பலின் உறுப்பினர்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வரும் டைகர் வெங்கட் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.இயக்கம்கர்னாடக்காவில் இருந்த அச்சுறுத்தும் கும்பலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இயக்குனர் டைகர் வெங்கட் இயக்கியுள்ளார். படத்தில் காட்டப்படும் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழ கூடியதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளார்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. காட்சிகள் ஒன்றுக்கும் ஒன்றுக்கும் பிணைப்பு இல்லை.
படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும், படத்தின் காட்டப்படும் கற்பழிப்பு காட்சிகளும் மற்றும் கொள்ளை சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்துகிறது.ஒளிப்பதிவு கிராமப்புற காட்சிகளை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் இளங்கோவன். இசைஜித்தின் கே ரோஷனின் பின்னணி இசை கேட்கும் ரகம்.தயாரிப்புவெங்கட் மூவீஸ் நிறுவனம் தண்டுபாளையம் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…