D Block Movie Review
அடர்ந்த காட்டின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் அருள்நிதி முதலாம் ஆண்டு சேர்கிறார். இக்கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் தாமதமான நேரங்களில் வெளியே வரவேண்டாம் என கல்லூரி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் இதனை பின்பற்றாதபோது மாணவர்களுக்கு சில சிக்கல்கள் உருவாகின்றன.
அருள்நிதியின் வகுப்பில் படிக்கும் தோழிகளில் ஒருவரான பரதநாட்டிய நடனக் கலைஞர் சுவாதி மர்மமான முறையில் இறக்கிறார். அவருடைய உடல்களில் சில காயங்கள் இருப்பதால் நிர்வாகம் அதை காட்டு-விலங்குத் தாக்குதலாக இருக்கும் என்று மூடி மறைக்கின்றனர். இதுப்போன்று தொடர்ச்சியான மரணம் குறித்து சந்தேகம் ஏற்படும் அருள்நிதி தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அருள்நிதி இந்த மரணத்திற்கான காரணம் என்ன? எதனால் இந்த கொலை நிகழ்த்தப்படுகிறது? இந்த கொலைகளை யார் செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
படத்தின் அவுட்லைன் நன்றாகத் தோன்றினாலும், கதை மற்றும் திரைக்கதை ஆழமானதாக இல்லை. திரில்லர் படத்திற்கான விறுவிறுப்பும் சுவாரசியமும் தோய்ந்து கிடக்கிறது. படத்தில் தோன்றும் விஷயங்கள் பலவற்றை எளிதாக பார்வையாளர்களால் கண்டுபிடித்து விட முடிகிறது. படத்தின் சில இடங்களில் மட்டுமே விறுவிறுப்பும் சுவாரசியமும் தென்பட்டு கதைக்கான நீரோட்டத்தில் ஓடுகிறது.
காதல் காட்சிகள் சில இடங்களில் ரசனை அளிக்கிறது. யூடியூப் பிரபலம் எருமை சாணி விஜய்குமார் தனது முதல் படத்தில் எடுத்து இருக்கும் முயற்சி பாராட்டும் படி இருக்கிறது. முதல் பாதி திரைக்கதையில் கட்டப்படும் முடிச்சுகளை இரண்டாம் பாதியில் கட்டவிழ்க்க நினைப்பதில் வீரியம் இல்லை.
அருள்நிதியின் முந்தைய படங்களில் தோன்றும் திரில்லர் அம்சங்கள் குறைந்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அருள்நிதியின் தேர்ந்த நடிப்பு படத்தில் இருந்து விலகி செல்லாமல் கவனத்தில் வைக்கிறது. இவரின் நடிப்பு படத்திற்கான கண்ணியமான வேலையைச் செய்திருக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் அவந்திகா மிஸ்ரா தனது பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார். பாடல் காட்சி திரில்லர் காட்சி என அவரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன் இவர்களின் தேர்ந்த நடிப்பு அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறது.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு எதார்த்தமாக படத்திற்குள் அமைந்திருக்கிறது. ரோன் ஈத்தன் யோகனின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. இவரின் முந்தைய படங்களில் கொடுத்திருந்த விறுவிறுப்பான இசை போன்று இப்படத்தின் இசையும் திரைக்கதைக்கு உதவி இருக்கிறது.
மொத்தத்தில் டி பிளாக் திறக்கப்படவில்லை.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…