திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படம் 2 பாகங்களாக தயாராகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு நடிகர்கள் கார்த்தி, ரகுமானுடன் நடிகை திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட ராணி அகில்யாபாயால் அமைக்கப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. நேற்று அக்கரை பகுதியில் நடிகை திரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

கரையில் வந்து இறங்கிய நடிகை திரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை திரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை திரிஷா காலணியுடன் நடந்து வந்ததால் அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகாரும் தெரிவித்துள்ளன.

இந்த பகுதியில் ஏற்கனவே சல்மான்கான் நடித்த ‘தபாங்-3’ படப்பிடிப்பின் போதும் சிவலிங்கத்தின் மேற்புறம் பலகை அமைத்து, அதில் காலணிகளுடன் நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பிறகு ‘யமுனா பக்லா தீவானா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

Suresh

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

6 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

6 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

6 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

10 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

10 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago