சீயான் விக்ரம் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது. விக்ரமின் பல வேடங்கள், அஜய் ஞானமுத்துவின் சஸ்பென்ஸ் இயக்கம் என பல எதிர்பார்ப்பை கோப்ரா படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை கோப்ரா முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.

கணக்கு வாத்தியாராக விக்ரம், பிரான்ஸ், ரஷியா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரமுகர்களை வித்தியாசமான முறையில் கொலை செய்கிறார். இதை இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த விசாரணையில் பல தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது.

இறுதியில் விக்ரமை இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் கண்டுபிடித்தாரா? முக்கிய அதிகாரிகளை விக்ரம் கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம், பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆகிய காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். காதலியாக ஶ்ரீ நிதி ஷெட்டி, விக்ரமை துரத்தி துரத்தி காதலித்து அவர் மனதில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.

இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மிருணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

விக்ரமை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விக்ரமுக்கு பல கெட்டப்புகள் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குறிப்பாக ஆதிரா பாடல் மற்றும் பின்னணி இசைக்கி சபாஷ் போடலாம். புவன் சீனிவாசன் மற்றும் ஹரிஷ் கண்ணன் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் எதிர்பார்த்து திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது கோப்ரா..

Suresh

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

14 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

14 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

14 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

14 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

14 hours ago