Change of lead actor in Arun Vijay film
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கும் அருண்விஜய்யின் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார்.
எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி, அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…