Celebrity who raised voice in support of Sanam Shetty
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சனம் ஷெட்டி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. சனம் ஷெட்டிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் சனம் வெளியேறியது அதிர்ச்சியளித்தது. வெளியேறிய பின் கமல்ஹாசன் முன்னிலையில் சனம் இதர போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆரி, “நீ ஒரு ட்ரூ வாரியர் சனம். இந்த எவிக்ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது” என கமல் முன்பாகவே ஓப்பனாக சொல்லிவிட்டார். இதற்கு பதிலளித்த சனம் மக்களின் தீர்ப்பை மதிப்போம் என கூலாக சொல்லிவிட்டு வெளியேறினார்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…