வலிமை படத்தைக் கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்… கோபத்தை வெளிப்படுத்திய திரையுலக பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலில் கலக்கி வரும் திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மூன்று நாளில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் ஏற்கனவே அஜீத் ரசிகர்கள் வசை பாடி வரும் நிலையில் இவர் சமீபத்தில் டுவிட்டரில் அஜித் நாங்க வேற மாதிரி பாடலுக்கு நடனமாடும் புகைப்படத்தை வெளியிட்டு பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த காட்சியை பார்த்து தியேட்டரில் சிரிக்காதவர்கள் உண்டா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகை கீர்த்தி பாண்டியன் ஒரு நடிகரை தரக்குறைவாக இப்படி விமர்சனம் செய்து பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒரு படத்தைப் பார்த்து விட்டு அந்த படத்திற்கான வசனத்தை சொல்வதில் உங்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் ஒருவரை கேலி செய்வது உரிமையில்லை என கூறியுள்ளார்.

தயாரிப்பாளரான ஃபோப்டா தனஞ்செழியன் அவர்கள் இந்த பதிவை பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன். ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் டாக்கீஸ் இதை மாற்றி கொண்டு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுரேஷ் சந்திராவிற்கு வலியுறுத்தி வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

5 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

5 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

5 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

5 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

5 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

23 hours ago