கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் சொன்ன தகவல். குழப்பத்தில் ரசிகர்கள்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,’கேப்டன் மில்லர்’ படத்தின் சீக்குவல் மற்றும் பிரீக்குவல் கதைகள் இருக்கின்றன. இப்போது வெளியாகும் பாகம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த பாகத்தை தொடரலாம். தனுஷிடம் கதை சொல்லும் போதே பிரீக்குவலுடன் சேர்த்து தான் கூறினேன். ஆனால், அது இன்னும் பெரிய பட்ஜெட் என்பதால் தான் இரண்டாம் பாகத்தை எடுத்தோம் என்று கூறினார்.

Captain Miller director latest update
jothika lakshu

Recent Posts

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

20 hours ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

20 hours ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

24 hours ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 day ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

1 day ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

1 day ago