Can you slide to Santhanam 'DD Next Level' collection collapse!
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. திகில் கலந்த நகைச்சுவை கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படம், ‘தில்லுக்கு துட்டு’ வரிசையில் நான்காவது பாகமாகும். இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானத்துடன் கீத்திகா டிவாரி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வெளியான பிறகு படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதன் எதிரொலியாக, படத்தின் வசூலும் குறைய தொடங்கியுள்ளது. வெளியான இரண்டு நாட்களில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உலக அளவில் 5.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
இந்த வசூல் நிலவரம் திரையுலக வட்டாரங்களில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தானம் தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களில் நடித்து வந்தாலும், இந்த படத்தின் வசூல் அவரது முந்தைய படங்களின் வசூலை விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சந்தானத்தின் திரைப்பயணத்தில் இது ஒரு சறுக்கலா அல்லது வரும் நாட்களில் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…