Latest Tamil cinema News
ஆன்மீகம்

இறந்தவர்களின் பொருட்களை வீட்டில் வைக்கலாமா?

* விபத்து, கொலை, தற்கொலை என இந்த வகையில் இறந்தவர்களின் ஜாதகத்தை, உடைகளை அல்லது பொருட்களை வீட்டில் வைத்தல் கூடாது.

அது தேவையில்லாத அமானுஷ்ய விஷயங்கள் வீட்டில் நடக்க வழிவகை செய்து விடும். இந்த நிலையில் மேற்கண்ட பொருள்களை ஒரு அமாவாசை தினத்தில் சமுத்திரத்தில் தூக்கி வீசி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுதல் நலம்.

* எது சரி? எது தவறு?

மற்றபடி எல்லா பொறுப்புகளையும் முறையே செய்து முடித்து 70/ 80 வயதில் இயற்கையாக இறந்த மூதாட்டிகள் அல்லது சுமங்கலிகள் அல்லது பெரியோர்கள், உடைகளை அல்லது பொருட்களை வீட்டில் வைப்பதால் தவறு எதுவுமில்லை.

வயதாகியிருந்த சுமங்கலி தாய்மார்கள் என்றால் மிகவும் விசேஷம். அவர்களது பொருட்களை வணக்கத்திற்கு உரிய பொருள்களாக வணங்குதல் நலம்.

* ஒருவேளை கணவன் இறந்த அந்த மூதாட்டி பிள்ளைகளை வளர்த்து பேரன் பேத்தி எடுத்து இயற்கையாக மரணம் அடைந்து இருப்பின் அவர் பொருள்களை ஒரு நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்ளலாம்.

* குறிப்பு:

மேற்கண்டவர்கள் இறந்தவர்கள் யாராக இருப்பினும் அதாவது எந்த வகையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உள்ளாடைகள் மற்றும் ஷூ, செருப்பு போன்றவற்றை வீட்டில் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால் அது அசௌகரியத்திற்கு வழிவகை செய்து விடும்.

Related posts

சித்தர்கள் கூறும் அட்டமா சித்திகள் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமா?

user

எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெயினால் தீபம் ஏற்றலாம்? என்பதை அறிந்து கொள்வோமா!.

user

கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?

user