Categories: Health

10 வயதுக்குள் பூப்படைந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள்

“பத்து வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பத்து வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் மணி, மருத்துவ நிலைய அதிகாரி ஆனந்த் பிரதாப் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

இதுகுறித்து டாக்டர் ஆனந்த் பிரதாப் கூறியதாவது: புற்றுநோய் சிகிச்சைக்காக மருந்தியல் துறை, அறுவை சிகிச்சைத் துறை, கதிரியக்கத் துறை என ஒருங்கிணந்த சிகிச்சை முறைகள் தமிழகத்திலேயே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்தான் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது.

இன்றளவும் அத்துறைகள் சிறப்புற செயல்பட்டு வருகின்றன. ராயப்பேட்டை மருத்துவமனையில் அளிக்கப்படும் அதி நவீன சிகிச்சைகளால் புற்றுநோயாளிகளில் பலர் முழுவதுமாக நோயிலிருந்து விடுபடுகின்றனர்.

இறுதிநிலையை எட்டிய நோயாளிகளுக்குக் கூட வலி நிவாரண மையம் அமைக்கப்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது என்றார் அவர்.

மருத்துவமனையின் கதிரியக்கத் துறைத் தலைவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சரவணன் கூறியதாவது:

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆண்டுதோறும், 1,200 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், 300 பேர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த காலங்களில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது.

தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக இளம் வயதினர் பலர் அத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 10 வயதுக்குள் பூப்படைவதும், மரபணு ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாவதும் கூட இளம் வயதில் மார்பகப் புற்றுநோய் வர காரணமாக அமையலாம்.

அதுமட்டுமல்லாது சரிவர தாய்ப்பால் வழங்காததும், உடல் பருமனைக் குறைக்காததும் முக்கியக் காரணங்களாக உள்ளன. ஆரம்ப நிலை பரிசோதனைகள் வாயிலாக மட்டுமே மார்பகப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

admin

Recent Posts

Yezhu Kadal Yezhu Malai Release Trailer

Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…

9 hours ago

Oru Chinna Panithuli Lyric Video

Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…

10 hours ago

திருமணத்தின் விளிம்பு வரை சென்றேன்; ஆனால் அது எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை – சுருதி ஹாசன் ஓபன் டாக்

நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…

11 hours ago

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை – நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…

11 hours ago

தவெக ஆட்சி எப்படி உள்ளது? – ஒரே வார்த்தையில் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…

11 hours ago

மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்! வைரலாகும் புகைப்படங்கள்

72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…

11 hours ago