பாட்டல் ராதா திரை விமர்சனம்

கட்டட தொழில் மேஸ்திரியாக வேலைப் பார்த்து வருகிறார் கதாநாயகனான குரு சோமசுந்தரம். இவர் குடிப்பழக்கத்தில் அடிமையானவர். இவர் சஞ்சனா நட்ராஜனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன. குடிப்பழக்கத்தினால் தொழில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை. இவரது மனைவி குரு சோமசுந்தரத்தை குடிப்பழக்கத்தில் மீள மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார். அங்கு நிறைய துன்பங்களை அனுபவிக்கிறார். மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்க குரு சோமசுந்தரம் முயற்சி செய்கிறார். அங்கு இருந்து தப்பித்தாரா? குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டாரா? இவரது குடிப்பழக்கத்தினால் குடும்பம் எவ்வளவு அவதியை சந்திக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகர்கள் நாயகனான குரு சோமசுந்தரம் குடிப்பழக்கத்தில் அடிமையான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். குடித்துவிட்டு நடிக்கும் காட்சியாக இருக்கட்டும் அதில் இருந்து மீள முயற்சிக்கும் காட்சியாக இருக்கட்டும் பார்வையாளர்களை அவரது நடிப்பால் கட்டிப் போடுகிறார். குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன்,

குடியால் பாதிக்கப்படும் குடும்பத் தலைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்களில் ஸ்கோர் செய்துள்ளார். ஜான்விஜய் அவரது வழக்கமான பாணியில் வில்லத்தனம் கலந்த நல்லவனாக நடித்துள்ளார். மறு வாழ்வு மையத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களாக மாறன், பாரி இளவழகன், ஆண்டனி,ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என அனைவரும் அவர்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். லொள்ளு சபா மாறனின் டைமிங் கவுண்டர்கள் திரையரங்களை சிரிப்பால் அதிரவைத்துள்ளது. இயக்கம் குடிப்பழக்கத்தினால் தான் கெடுவதும் அல்லாமல் அவரை சுற்றி இருக்கும் நபர்களும் அவரது குடும்பமும் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதை நகைச்சுவை கலந்து மிக எமோஷனலாக கூறியுள்ளார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் .

மறுவாழ்வு மையங்கள் செயல்படும் விதம், அதன் மூலம் மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களின் அடுத்த நிலை, என இதுவரை திரையில் பார்த்திராத பல விசயங்களை, எந்தவித நெருடல் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தினகரன் சிவலிங்கம், திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி பொழுதுபோக்கு படமாகவும் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் மறுவாழ்வு மையத்தில் இருந்து வெளிவந்த குரு சோமசுந்தரத்தில் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்திருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதலாக ரசிக்கப்படிருக்கும். இசை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவு ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. தயாரிப்பு நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.

bottle radha movie review
jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

2 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

2 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

3 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

6 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

6 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago