ஊட்டியில் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு இடத்தை பிளாட் போட்டு விற்கும் பிராஜெக்ட் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் விதுவுக்கு வருகிறது. இதற்காக விது, ஐஸ்வர்யா ராஜேஷ், விதுவின் தங்கை மாதுரி, தோழி சூர்யா கணபதி ஆகியோர் ஊட்டிக்கு செல்கிறார்கள்.

அங்கு விதுவின் நண்பரிடம் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருகிறது. இறந்த நண்பன் செல்போனில் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருவதை கண்டு விது உள்ளிட்ட அனைவரும் வியக்கிறார்கள்.

செல்போனை ஆப் செய்து வைத்தாலும் அந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறது. அதை தொடர்ந்து வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில், அந்த செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது யார்? எதற்காக அனுப்புகிறார்கள்? அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, மாதுரி ஆகிய நான்கு பேர் மட்டுமே அதிகம் வருகிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். விது, சூர்யா கணபதி அளவான நடிப்பையும், மாதிரி அளவிற்கு மீறிய நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்கள்.

காவலாளியாக வரும் பாவெல் நவகீதன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் அவந்திகா வந்தனபூ, வித்தியாசமான கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்து இருக்கிறார்.

இயற்கை சமந்தப்பட்ட கதையை திகில் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரதீந்திரன். பேய் படங்களுக்கு உண்டான மலைப் பிரதேசம், பங்களா, பயங்கர அமைதி, இருட்டு என அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர். பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், மரம், செடி, கொடிகளை ஓவியங்கள் வழியே காட்டியிருப்பது சிறப்பு.

படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். ஆனாலும் இயற்கைக்கு எதிராக செயல்படாதீர்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுக்கள்.

பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரில்லர் படத்திற்கு தேவையானதை சரியாக கொடுத்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘பூமிகா’ இயற்கை அழகு.
Suresh

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

4 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

6 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

6 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

6 hours ago