Bollywood films that leaked online before release date
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிமி’ எனும் காமெடிப் படம், வருகிற 30-ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட இருந்தது. லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், சில இணையதளங்களில் ‘மிமி’ படம் திருட்டுத்தனமாக வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி திட்டமிட்டதற்கு முன்பாகவே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் இணையத்தில் எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…