பிளடி பெக்கர் திரைவிமர்சனம்

கவின் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார். ஒரு நாள் பார்வையற்றவனாக, ஒரு நாள் கால் இல்லாத ஊனமுற்றோராக என நடித்து பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தும் செல்வாக்கும் உள்ள ஒரு நபர் இறந்துவிட அவரின் நினைவாக ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்க ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கின்றனர். அப்பொழுது அந்த ஆதரவற்ற ஒருவராக கவின் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அந்த ஆடம்பர பங்களாவில் நுழைகிறார். நீண்ட நாளாக கவினுக்கு அந்த மாளிகையில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அந்த மாளிகையில் என்ன இருக்கிறது என பார்க்கும் ஆர்வத்தில் உள்ளே நுழைகிறார்.

மாளிகையில் நுழைந்தப்பின் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கவினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அப்படி என்ன சிக்கல் இருக்கிறது அந்த மாளிகையில் ? கவின் உயிர் தப்பித்து மாளிகையில் இருந்து வெளிவந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. நடிகர்கள் கவின் பிச்சைக்காரன் கதாப்பாத்திரத்திற்கு பொருந்தும் விதமாக தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இடையே உள்ள நகைச்சுவை காட்சிகள் நிறைய இடத்தில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. மாருதி பிரகாஷ்ராஜ், சுனில், கார்த்திக், அக்‌ஷயா ஹரிஹரன் மற்றும் நடித்த நடிகர்கள் அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இயக்கம் ஒரு பிச்சைக்காரன் பணக்கார வீட்டில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என கற்பனை கதையை நகைச்சுவை தன்மையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் சிவபாலன் முத்துகுமார்.

திரைப்படம் தொடங்கி 20 நிமிடங்களிலே மாளிகைக்குள் கவின் செல்ல பின் திரைப்படம் இறுதிவரை கதை மாளிகைக்குள்ளே நகர்கிறது இது பார்வையாளர்களுக்கு சோர்வை தருகிறது. நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் படத்தில் பல இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் படம் கூடுதல் ரசிக்க பட்டிருக்கும். இசை ஜென் மார்டின் இசை படத்திற்கு கூடுதல் பலம். படத்தில் இடம்பெற்றுள்ள பொன்மாயமே என்ற பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு படத்தின் பெரும்பாலான பகுதி மாளிகைக்குள் நடக்கிறது இதை மிகவும் சுவாரத்தியுடனும் நேர்த்தியாகவும் கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்.தயாரிப்புஃபிலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

bloody beggar movie review
jothika lakshu

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

7 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

8 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

8 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

15 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

15 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

16 hours ago