Bigg Boss title winner Aari - Former actress
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் அக்டோபர் 4ந்தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த வாரம் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆஜித் குறைந்த வாக்குகளைப் பெற்று 11-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரம் முழுக்க ஆரி – பாலாஜி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாலாஜியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். அதே வேளையில் சக போட்டியாளர்கள் வைக்கும் சிறு சிறு விஷயங்களை திருத்திக் கொள்ளலாமே என்றும் ஆரிக்கு அறிவுரை வழங்கினார்.
ஆரி – பாலாஜி இருவரிடையேயான மோதலைப் பார்த்த பார்வையாளர்கள் சிலர் ஆரிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் பாலாஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா பசுபுலெட்டி தான் ஆரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார். நடிகை ரேஷ்மா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…
Naan Dhaan King Lyric Video | Con City | Arjun Das | Anna Ben |…
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…