Bigg Boss Kavin Lift movie to release on OTT
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘லிப்ட்’. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன. இந்நிலையில், ‘லிப்ட்’ படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும். ஆனால், ‘லிப்ட்’ தியேட்டருக்கான படம் தான்” என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…