நடிகர் பாபுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பாரதிராஜா. வைரலாகும் பதிவு

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என் உயிர் தோழன்’. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.

அன்றிலிருந்து ‘என் உயிர் தோழன்’ பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். நான்கு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பாபு 5-வது படத்தில் தனது திரை வாழ்க்கையே தொலைத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 1991-ல் ‘மனசார வாழ்த்துக்களேன்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு தயாராகினார். ஆனால், படப்பிடிப்பு குழுவினர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறி டூப் நடிகரை தயார்படுத்தியுள்ளனர். பாபு நானே குதிக்கிறேன் என்று குதித்த போது

டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்.

இந்நிலையில், நடிகர் பாபு இன்று காலமானார். இவருக்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ” என் உயிர் தோழன் பாபு “வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago