கண்ணம்மா கொடுத்த ஷாக்..குழப்பத்தில் ஹேமா.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா என்ன ஆசிரமத்துல கொண்டு போய் விட்டுடுங்க என சொல்ல எல்லோரும் அப்படி பேசாத நீ அனாதை கிடையாது என கூறுகின்றனர்.

அதன் பிறகு ஹேமா சமையல் அம்மா நீங்க தான் எதையும் கரெக்டா பேசுவீங்க என்ன எந்த ஆசிரமத்தில் இருந்து தூக்கி வந்தாங்களோ அங்கேயே கொண்டு போய் விட்டுடுங்க என சொல்ல கண்ணம்மா அனாதன்னு சொல்லாத என கூறுகிறார். ஆனாலும் ஹேமா திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருக்க வேற வழியில்லாமல் கண்ணம்மா நீ அனாதை கிடையாது உன்ன பெத்த அம்மா உயிரோடு இருக்கும் வரை நீ அனாதை கிடையாது என கூறுகிறார்.

உடனே ஹேமா என்ன சொல்றீங்க என்ன அம்மா உயிரோட இருக்காங்களா எங்க இருக்காங்க யார் அவங்க உங்களுக்கு தெரியுமா என கேள்வி மேல் கேள்வி கேட்க பிறகு ஒரு கட்டத்தில் சௌந்தர்யா தடுத்தும் அதை மீறி கண்ணம்மா உன்னுடைய அம்மா நான் தான். சமையல் அம்மா சமையல் அம்மானு கூப்பிட்டு இருந்த நான் தான் உன்னுடைய அம்மா உன்னை பத்து மாசம் சுமந்து அம்மா என கூற நீங்க என்ன சொல்றீங்க என கேட்க கண்ணம்மா ஆமாம் என கூறுகிறார். ஆனாலும் நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன். என்ன சமாதானப்படுத்த தான் இப்படி சொல்றீங்க என கூறுகிறார்.

அப்புறம் எப்படி நான் இந்த வீட்டுக்கு வந்தேன் என கேட்க நீ என் லட்சுமியும் ஒன்னா பிறந்த ரெட்டை குழந்தைங்க உன்னை யாரோ தூக்கிட்டு போய் ஆசிரமத்துல விட்டுட்டாங்க அந்த விஷயம் எனக்கு எட்டு வருஷத்துக்கு அப்புறம் தான் தெரியவந்தது. நீதான் அந்த பொண்ணுன்னு தெரிஞ்சதும் உன்னை தூக்கிட்டு பாக்க நான் வந்தேன் ஆனா இங்கே இருக்கவங்க அவ எங்க வீட்டு பொண்ண வளர இங்கேயே இருக்கட்டும் என கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க அதனால தான் விட்டுட்டு போனேன் என சொல்ல ஹேமா குழப்பம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

6 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

6 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

7 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

7 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

13 hours ago