பாரதிக்கு குடும்பதார்க்கு கொடுத்த ஷாக்..வருத்தத்தில் ஷர்மிளா.. இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் எல்லோரும் பாரதியை நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர். அன்னைக்கு ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள் பாம் கட்டி தொங்கவிட்டபோது கண்ணம்மா உயிரை பணயம் வைத்து உன்னை காப்பாற்றினான். பழையதை மறந்து விட்டு அவளுடன் சேர்ந்து வாழ எல்லோரும் கெஞ்சியும் நீ முடியாது என சொல்லிட்ட. ஆனா இப்போ வெண்பாக் கழுத்துல தாலி கட்ட வந்திருக்கேன் இதுக்கு பேரு என்ன என கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

ஒவ்வொருத்தரும் நீ எனக்கு புள்ளையே இல்ல அண்ணனே இல்ல என பாரதியை திட்டி தீர்க்க அப்போது வரும் லட்சுமி, ஹேமா உங்களை பார்த்தாலே புடிக்கல ஐ ஹேட் யூ என சொல்லி விடுகின்றனர். இன்னும் எவ்வளவு பொய்தான் என்கிட்ட சொல்ல போறீங்க இனிமே என்கிட்ட பேசாதீங்க நான் உங்கள டாடி என்று கூப்பிட மாட்டேன் நீங்களும் என்னை பேர் சொல்லி கூப்பிடாதீங்க என ஹேமா அதிர்ச்சி கொடுத்து கண்ணம்மாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். எல்லோரும் என் முகத்திலேயே முழிக்காத என சொல்லிவிட்டு வெளியே போக பாரதி தனி மரமாக தவித்து நிற்கிறார்.

பிறகு வெண்பா பாரதி என பேச வர பேசாத இனிமே என் முகத்திலேயே முழிக்காத உன்னால நான் நடுத்தெருவுல நிற்கிறேன் என கோபப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு இனிமே உன்னை யாரு கட்டிக்கவா என ஷர்மிளா கண்கலங்க நான் இருக்கேன் என ரோகித் குரல் கொடுக்கிறார். வெண்பா மேல நான் உயிரையே வச்சிருக்கேன், அவ வயித்துல வளர்வது என்னுடைய குழந்தை என சொல்லி தாலி கட்ட தயாராகிறார்.

பிறகு ரோஹித்தின் அம்மா அவ உன்ன ஏமாத்திட்டு போனவ அவ வேண்டாம் என சொல்ல ஒரு வழியாக அம்மாவையும் சம்மதிக்க வைத்து வெண்பா கழுத்தில் தாலி கட்ட போக கடைசி நொடியில் ஸ்டாப்பிட் ரோகித் என நிறுத்துகிறார் வெண்பா. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

53 minutes ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

57 minutes ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

3 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

3 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

4 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

4 hours ago