bharathi kannamma serial episode update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு பாரதி ஜானகி டீச்சர் பார்த்து ஆபரேஷன் குறித்து பேச அவர் ஆப்பரேஷன் செய்து கொள்ளப் போவதில்லை என உறுதியாக கூறிவிடுகிறார். பாரதி அவரை சம்மதிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். ராமன் சார் நீங்களாவது எடுத்து சொல்லலாமே என கேட்க அவர் ஜானகி ஒரு முடிவு எடுத்தால் அதை எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டாள். அவளுடைய முடிவுக்கு நானும் எப்போதும் முத்துக்கட்டையாக இருந்தது இல்லை இப்போதும் அப்படித்தான் என்னால் எதுவும் பேச முடியவில்லை எனக் கூறுகிறார்.
பிறகு பாரதி மீண்டும் ஜானகியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்ய அவர் ஒருவேளை ஆபரேஷன் செய்து நான் கொலை செய்தால் யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் இயங்க முடியுமா எனக் கேட்க பாரதி ஒருவரின் உதவி இருந்தால் நிச்சயம் வசதியாக இருக்கும் என சொல்ல அப்படி யாரையும் கஷ்டப்படுத்தி வாழும் என்று எந்த அவசியமும் இல்லை கடவுள் வாழ்க அனுமதித்த வரை வாழ்ந்துட்டு போகிறேன் என உறுதியாக சொல்லிவிடுகிறார். வேறு வழி இல்லாமல் பாரதியின் அமைதியாக வெளியே கிளம்பி செல்கிறார்.
இந்த பக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவை பெயர் சொல்லி அழைத்ததை வைத்து ஹேமா அப்போ சமையல் அம்மா தான் என்னுடைய அம்மாவா லட்சுமி என்னுடைய அக்காவா? அதனாலதான் வீட்ல எல்லோரும் சமையல் அம்மானு சொல்லி கூப்பிடறாங்களா அவங்க பெயர் எனக்கு தெரிய கூடாது தான் இப்படி பண்றாங்களா? என அவளுக்குள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொள்கிறார்.
இந்த பக்கம் வெண்பா கண்ணம்மாவை ரோகித் காப்பாற்றி விட்டதால் செம கடுப்பில் இருக்க அந்த நேரத்தில் ரோஹித் வந்து கண்ணம்மாவை காப்பாற்றியதை பற்றி பேசி அவர்களை இன்னும் கடுப்பேற்றுகிறார். என்ன நிம்மதியாக இருக்க விட மாட்டியா என சத்தம் போட்டுவிட்டு மேலே சென்று விடுகிறார். பிறகு பாரதி விக்ரமிடம் சென்று ஜானகி மேடம் கிட்ட பேசினீங்களா என்ன சொல்றாங்க என கேட்க அவங்க அவங்களோட முடிவுல உறுதியா இருக்காங்க, அவங்க அவ்வளவு சீக்கிரம் முடிவை மாற்றிக் கொள்ளும் ஆள் கிடையாது என கூறுகிறார். பிறகு பாரதி அங்கிருந்து சரியென கிளம்ப இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…