Bharathi Kannamma Serial Episode Update 25.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமி என்னுடைய அப்பா யாரு என கண்ணம்மாவை கேட்டுக் கொண்டிருக்க அவர் பாரதிதான் என கை காட்ட பின்னர் லட்சுமி பாரதியிடம் ஓடி செல்ல அவர் நில்லு நான் உன் அப்பா இல்லை இவர்தான் உன் அப்பா உங்க அம்மா பொய் சொல்றாங்க என வருணின் போட்டோவை எடுத்து காட்டுகிறார். இதனையடுத்து லட்சுமி இவர்தான் என் அப்பாவா டாக்டர் அண்ட் தான் அப்பா நீ ஏமா பொய் சொன்ன என்ன கேள்வி கேட்க கண்ணம்மா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். பிறகு தான் இதெல்லாம் கண்ணம்மாவின் கற்பனை என தெரிகிறது.
லட்சுமி கண்ணம்மாவின் கையை பிடித்து உலுக்கி அப்பா யாரு என கேட்டுக் கொண்டிருக்க அதன் பின்னர் நான் சொல்கிறேன் என பாரதி குரல் கொடுக்கிறார். லட்சுமி கூப்பிட்டு உனக்காக மட்டுமே வாழுற உங்க அம்மா தான் உனக்கு அப்பா அம்மா எல்லாமே. அவங்க உனக்காக அங்கு வாழ்க்கை மொத்தத்தையும் தியாகம் பண்ணி இருக்காங்க. நீ பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் என்னை பார்க்க வராதே அப்பாவை பத்தி யார்கிட்டயும் கேட்கவே கூடாது. யார் உன் அப்பா நீ கேட்டாலும் எல்லோரிடமும் நீ எங்க அம்மாதான் எனக்கு அம்மா அப்பா எல்லாமே என்றுதான் சொல்லணும் என கூறுகிறார். அவங்க பாவம் அவங்கள கஷ்டப்படுத்த கூடாது என சொல்கிறார். பாரதி சொல்வதைக் கேட்டுக்கொண்டு லட்சுமியும் சரி என சொல்லி தன் அம்மாவிடம் ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறார். இனிமே நான் அப்பாவை பற்றி கேட்கவே மாட்டேன் என சொல்கிறார். பிறகு பாரதி லட்சுமி மற்றும் ஹேமா இருவரையும் கைப்பிடித்து சமையல் அம்மாவுக்கு கேக் விடுங்க என கூற சௌந்தர்யா அதன் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சிடுச்சே கேக் கட் பண்ணு என சொல்கிறார்.
பிறகு கேக் கட் பண்ணி முடிந்ததும் பாரதிக்கு ஒரு போன் வர நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். உடனே சௌந்தர்யா ஒரு நிமிஷம் பாரதி என சொல்லி விட்டு குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு நீ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரியான வார்த்தை. கண்ணம்மா பற்றி உன் மனசுலே இப்படி ஒரு அபிப்ராயம் இருக்கின்றது சந்தோஷமா இருக்கு என சொல்ல நீங்க எப்படி வேணும்னா நினைச்சுக்கோங்க மா, என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு பாரதி போனது சௌந்தர்யா கண்ணாவிடம் நீயும் நானும் லட்சுமியிடம் இதைச் சொல்லியிருந்தால் அவள் கேட்டிருப்பாளா என எனக்கு தெரியாது. பாரதி சரியாகச் சொல்லி அவளுக்கு புரிய வைத்து விட்டான். இந்த ஒரு கெட்டதிலும் நல்லது என்று நான் நினைக்கிறேன் என கண்ணம்மாவை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…