வெண்பாவை கைது செய்த போலீஸ்.. பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் மருத்துவமனையில் கண்ணம்மாவை பார்த்த வெண்பா உன்னுடைய தகுதிக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆப்ட்ர் ஆல் நீ ஒரு சமையல்காரி, எந்த மருந்து எதற்குக் கொடுக்கணும்னு எதுவுமே தெரியாது அவங்க தான் உனக்கு வேலை கொடுக்கிறாங்கனா உனக்கு புத்தி எங்கே போச்சு என வெண்பா பேச பதிலுக்கு கண்ணம்மா நோஸ்கட் கொடுக்கிறார். நீ டாக்டர் பிரக்டிஸ் செய்யக் கூடாது என்று தடை போட்டு இருக்க டாக்டர். பல்லு புடுங்குன பாம்பு மாதிரி. உனக்கு என்ன தகுதி இருக்கு என கண்ணம்மா சொல்ல வெண்பா கடுப்பாகிறார்.

இதையெல்லாம் பார்த்த ஷர்மிளா யாரு என்ன எது எனக் கேட்க அவள்தான் கண்ணம்மா பாரதி ஓட பொண்டாட்டி என்ன சொல்ல இவ கிட்ட போய் பத்து வருஷமா தோத்து போயிருக்க என வெண்பாவை அசிங்க படுத்துகிறார்‌. இந்தப் பக்கம் சௌந்தர்யா மற்றும் வேணும் விக்ரமிடம் கண்ணம்மாவை வேலைக்கு சேர்த்தது பற்றி பேசுகின்றனர். மேலும் பாரதி சொன்ன விஷயத்தையும் கூறுகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் எட்டு மணி நேரம் ஒன்றாக வேலை பார்க்கப் போகிறார்கள். இதனால் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படும் என விக்ரம் கூறுகிறார். பிறகு குரூப் போட்டோவில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக நிற்க வைக்கிறார்.

இதைப்பார்த்த ஷர்மிளா இவங்களா பிரிய போறாங்க ரெண்டு பேரும் ஒன்னா ஒட்டி போஸ் கொடுக்கிறார்கள் எனக் கூறுகிறார். இந்த நேரத்தில் போலீஸ் உள்ளே வந்து வெண்பாவை கைது செய்கிறது. மூன்று மாதமாக கையெழுத்து போட ஸ்டேஷனுக்கு வராத காரணத்தினால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதாகவும் அதனால் கைது செய்கிறோம் என கூறுகின்றனர்.

பிறகு ஷர்மிளாவின் வெண்பாவிடம் நீ கையெழுத்து போட போலையா எனக் கேட்டு அவரை திட்டி போலீசாரை அழைத்து போக சொல்கிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடைகிறார். மேலும் சௌந்தர்யா ஒரு நல்ல விஷயம் நடந்த இடத்தில இப்படி உன் பிரண்டா அரஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க என சொல்ல விடு திரிஸட்டி கழிஞ்ச மாதிரி என வேணு சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு ஷர்மிளா டென்ஷன் ஆகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 21.04.22
jothika lakshu

Recent Posts

குறைந்த விலையில் நிறைய துணிகளை வேலவன் ஸ்டோரில் வாங்கி தீபாவளி ஷாப்பிங் செய்த எதிர்நீச்சல் ஷெரின்!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…

3 hours ago

Veiyil Lyrical Video

Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…

3 hours ago

God Mode Lyric Video

God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | ‪‪SaiAbhyankkar‬ |…

3 hours ago

Pagal Kanavu Official Teaser

Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…

3 hours ago

Aaryan Trailer Tamil

Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…

3 hours ago

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

2 days ago