கண்ணம்மாவின் பிறந்த நாளில் கலந்து கொள்ள முடிவு எடுக்கும் பாரதி.. பரபரப்பான திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சௌந்தர்யாவின் அவருடைய கணவரும் கண்ணம்மா பேசியதை கவனித்தீர்களா அவளுடைய பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெம்பும் இருக்கிறது. பாரதிக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்லப் போவதாக சொன்னாள் என்ன சொல்லுவா என தெரியவில்லை ஆளாளுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி கடைசியில் சௌந்தர்யா ஹேமா பற்றிய உண்மையை சொல்ல முடிவெடுத்து இருப்பாளோ என்று நினைக்கிறார்.

இதனைக் கேட்ட அவருடைய கணவர் ஒருவேளை அப்படி நடந்தால் ஒரு பெரிய பிரச்சனை இருக்கு ஆனால் அதே சமயம் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவும் இருக்கு என கூறுகிறார். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என இருவரும் பேசிக் கொள்கின்றனர்.

இந்தப் பக்கம் பாரதியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்த கண்ணம்மா வெண்பாவை மோதுகிறார். பிறகு வெண்பா நீ எதுக்கு இங்க வந்த எனக் கேட்க நீ எதுக்கு இங்க வந்த புருஷன் பொண்டாட்டி மாதிரி அடிக்கடி வந்துட்டுப் போற என கண்ணம்மா திட்டுகிறார். பிறகு பாரதி இருக்காரா எனக் கேட்க உள்ள இருக்கான் என வெண்பா சொல்கிறார். பிறகு கண்ணம்மா உள்ளே செல்ல அவருக்கு முன்பாக வெண்பா உள்ளே செல்ல முயற்சி செய்தபோது புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் விஷயம் பேசுவோம் நீ எதுக்கு உள்ளே வர, இங்கேயே இரு ரோஷம் இருந்தா இந்த இடத்தை விட்டுப் போய்விடு என சொல்லுகிறார்.

பிறகு உள்ளே போன கண்ணம்மா டாக்டர் என அழைக்க அவர் கடுப்பாகி எழுந்துக் கொள்கிறார். நீ எதுக்குடி இந்த வந்த பாரதி கேட்க உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போகலாமுன்னு வந்தேன் என சொல்கிறார். அதையெல்லாம் கேட்டு வாங்கக் கூடாது என பாரதி சொல்ல சரி இங்க சொல்ல வேண்டாம் அங்க வந்து சொல்லுங்க என கூறுகிறார். நான் எதுக்கு அங்க வரணும் கூட்டத்தில வச்சு என்ன அசிங்க படுத்த பார்க்கறியா என சொல்கிறார். லட்சுமியோட அப்பா நான் தான் சொல்ல போற அதான் உன்னோட திட்டம் என சொல்ல அது இல்ல வேற ஒரு விஷயம் இருக்கு அது உங்களுக்கே தெரியாத உங்கள் வாழ்க்கை பற்றிய ரகசியம். என்னுடைய வாழ்க்கை பற்றிய ரகசியம். அது நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் இருக்க விஷயம். அந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்தா எல்லாமே புரிந்து விடும் என கூறுகிறார்.

நீ என்னதான் கால்ல விழுந்து கதறினாலும் நான் வரமாட்டேன் என பாரதி சொல்ல நீங்க கண்டிப்பா வரணும் அந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப தேவைப்பட்ட விஷயம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். வெளியிலிருந்து காதை வைத்து ஒட்டு கேட்ட வெண்பாவை விட்டுவிட்டு அவரையும் விழாவிற்கு வந்துவிடு லட்சுமியுடன் அப்பா யாரென்று சொல்ல போறேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.

பிறகு உள்ளே போன வெண்பா என்ன சொன்னா எனக் கேட்க ஏதோ ரகசியம் சொல்ல போறான் அந்த விழாவிற்கு என்ன வர சொல்ற என சொல்ல நீ என்ன முடிவு பண்ணியிருக்க என்று வெண்பா கேட்கிறார். நான் எதுக்குப் போகணும் நான் போக மாட்டேன் என பாரதி சொல்ல நீ போ என சொல்லிவிட்டு நான் சொல்ற மாதிரி செய் கூட்டத்தில் அவ அசிங்கப்பட்டு நிற்பார் என ஒரு ஐடியாவை கூறுகிறார்.

இந்த பக்கம் பாரதி இன்னும் வரவில்லை என பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அந்த வீட்டு வேலைக்காரப் பெண்மணி பாப்பாவ கூட்டிட்டு அவரை வெளியே போய் இருக்காரு என சொல்ல அவர் எங்கே போனார் என தெரியாமல் குழம்பிப் போகின்றனர். அப்போது அகிலன் புதிதாக மாற்றப்பட்டுள்ள அஞ்சலியை உள்ளே இருந்து அழைத்து கொண்டு வெளியே வருகிறார். அகிலனும் சௌந்தர்யாவும் பாரதி வருவான் என நம்பிக்கை இருப்பதாக சொல்கின்றனர். சரி நாம ஃபங்ஷனுக்கு கிளம்பலாம் நம்ம போனால்தான் கண்ணம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்கிறார் சௌந்தர்யா.

இந்த பக்கம் கண்ணம்மா பாரதியைப் பார்த்து விட்டு விழாவுக்கு வரச் சொல்லிவிட்டு வந்து இருக்கேன் வருவாரா என தெரியவில்லை. இந்த முறையும் அவர் வராமல் போனால் லட்சுமிக்கு என்ன பதில் சொல்வது அவளை எப்படி பார்ப்பது என தெரியவில்லை என கண்கலங்கி அழுகிறார். எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என ஆறுதல் கூறுகிறார் கண்ணம்மாவின் அப்பா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 19.02.22
jothika lakshu

Recent Posts

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

19 hours ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

19 hours ago

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…

19 hours ago

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…

21 hours ago

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…

21 hours ago

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

2 days ago