bharathi kannamma serial episode update 15-11-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் கண்ணம்மா ஹேமா இங்கே என்ன லட்சுமி இடம் கேட்க அவள் கோபமாக இருக்கிறாள் என ஸ்கூலில் நடந்த விஷயத்தை சொல்ல சரி வா நான் பேசுறேன் என லட்சுமி அழைத்துக்கொண்டு ரூமுக்கு சென்று ஹேமாவிடம் பேச ஹேமா கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்.
பிறகு உங்க ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன் நான் ஒன் டூ த்ரீ எண்ணும் போது யாரு முதல்ல என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் அம்மா மேல பாசம் அதிகம் என சொல்லி ஒன் டூ த்ரீ என சொல்ல இருவரும் ஒரே நேரத்தில் கட்டியணைத்து முத்தமிடுகின்றனர். பிறகு ஹேமாவை சமாதானம் செய்து லட்சுமியிடம் பேச வைக்கிறார் கண்ணம்மா.
அடுத்து மூவரும் ஒன்றாக அமர்ந்து கீரை கிள்ளி கொண்டிருக்க அப்போது சௌந்தர்யா வீட்டுக்கு வந்து கண்ணம்மாவை தனியாக அழைத்துச் சென்று தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வர சொல்லி கேட்க கண்ணம்மா நான் இப்ப ஒத்துக்கிட்டாலும் பசங்க அங்க வர மனநிலையில் இல்லை என சொல்லி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு சௌந்தர்யா பணம் கொடுக்க கண்ணம்மா வேண்டாம் என கூறி விடுகிறார். நீங்களும் இங்க வாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து தீபாவளி கொண்டாடலாம். எல்லோருக்கும் ஒரு மாற்றமாகவும் இருக்கும் மனநிலையும் கொஞ்சம் மாறும் என சொல்ல சௌந்தர்யா சந்தோஷமாகி எல்லோரும் நாளைக்கு வரோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு கண்ணம்மா ஹேமா, லட்சுமி என மூவரும் சென்று தீபாவளிக்கு துணி எடுத்து மகிழ்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…