பாரதியிடம் பல்பு வாங்கிய வெண்பா.. அப்பாவை கண்டுபிடிக்க லஷ்மி எடுக்கும் முடிவு .. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வெண்பா, பாரதி கண்ணம்மாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததை நினைத்து கடுப்பாகிறார். என்கிட்டே வந்து அந்த கண்ணம்மாவை பார்க்கவே பிடிக்கல ஒரே கடுப்பா இருக்கு என கம்பி கற்ற கதை எல்லாம் சொல்லி விட்டு அவளை தூக்கிட்டு போயி கொஞ்சி குலாவி முத்தமிட்டு ட்ரீட்மென்ட் கொடுக்கிறான். அவனை சும்மா விட போவதில்லை என கூறுகிறார். சாந்தி அதெல்லாம் வேண்டாம் கொஞ்சம் அமைதியா இருங்க ஏற்கனவே சண்டை போட்டு இருக்கீங்க என கூற நீ கொஞ்சம் அமைதியா இரு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என சொல்லிவிட்டு பாரதிக்கு போன் போடுகிறார்.

முதலில் பாரதி வெண்பாவின் போனை கட் செய்து விட என் போனையே கட் பண்றியா அந்த அளவுக்கு ஆயிட்டியா உன்ன விடமாட்டேன் என வீட்டில் கடுப்பாகி திரும்பவும் போன் போடுகிறார். என்கிட்ட வந்து அந்த கண்ணம்மாவை பிடிக்கல வெறுப்பா இருக்கு என கதைய சொல்லிட்டு அவள கூட்டிட்டு போயிட்டு கொஞ்சி குலாவி ட்ரீட்மெண்ட் கொடுக்கிற, என்கிட்ட எதுக்கு நடிக்கிற என கோபப்படுகிறார். ஒரு டாக்டரா என் வேலையை செய்கிறேன் என பாரதி சொல்ல இந்த கதையெல்லாம் என்கிட்ட விடாதே என திரும்பத் திரும்ப கோபப்படுகிறார். இதனால் கடுப்பான பாரதி உனக்கு அவ்வளவு தான் லிமிடெட் இனி ஒரு வார்த்தை பேசுறேன் அப்புறம் நடக்குறதே வேற என்ன திட்டி விட்டு போனை வைத்து விடுகிறார். இதையெல்லாம் ஓரமாக நின்று பார்த்த வெண்பா ரொம்ப கெட்டவங்க அப்பாவை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. சமையல் அம்மா ரொம்ப நல்லவங்க, அவங்க அம்மாவா வந்தா எப்படி இருக்கும் என நினைக்கிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா அடிபட்ட கையோடு மாவு அரைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வந்த லட்சுமி நீ ஏன்மா இதெலாம் செய்யற என கண்ணம்மாவை உட்கார வைத்து விட்டு நான் செய்கிறேன் என கூறுகிறார். பிறகு லட்சுமி மாவரைத்து கொண்டிருக்க அப்போது வாய்தா வடிவுக்கரசி வந்து நீ போய் படிக்கிற வேலையை மட்டும் பாரு இதை நான் பார்த்துகிறேன் என அனுப்பி வைக்கிறார். பிறகு கண்ணம்மாவிடம் உனக்கும் அதற்கும் இடையில் பிரச்சனை இருந்தாலும் இன்னும் ஏதோ உங்களுக்குள் பாசம் இருக்கிறது. ‌‌ அவர் போனை யாரோ திருடிட்டு போற உனக்கு என்ன நீ எதுக்கு சண்டை போட போன? உன்னை அடிக்கிறான் தெரிஞ்சதும் அவர் எதுக்கு ஓடி வரணும். உங்களுக்குள்ள இதைத் தெய்வீக பந்தம் இருக்கு. ஒரு நாள் கண்டிப்பா நீங்க ஒன்று சேருவீர்கள் என கூறுகிறார்.

அப்படியே இந்த பக்கம் பாரதி கண்ணம்மாவை பற்றி யோசித்துக் கொண்டிருக்க அப்போது வந்த ஹேமா நீங்க யாரை பற்றி யோசிக்கறீங்கனு என்று சொல்லட்டுமா என கேட்கிறார். பாரதி எங்கே சொல்லு பார்க்கலாம் என கேட்க சமையல் அம்மாவைப் பத்தி தானே யோசிக்கிறீங்க என கூறுகிறார். எப்படி கரெக்டா சொன்னே எனக் கேட்க அவங்க தான் இன்னைக்கு உங்களோட உயிர காப்பாத்த நாங்க அப்போ அவங்கள பத்தி தானே இருப்பீங்க. வீட்ல இருக்கேன் எல்லோரும் சமையல் அம்மா பத்தி தான் பேசிகிட்டு இருக்காங்க. அவங்க ரொம்ப நல்லவங்க, அவங்க எல்லோரும் மேலேயும் வச்சி இருக்க பாசம் உண்மையான பாசம் என பாட்டி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. சமையல் அம்மா நல்லவங்க தானே நீங்க சொல்லுங்க என ஹேமா கேட்க பாரதி பேச்சை மாற்ற இல்ல நீங்க உங்க வாயால சொல்லுங்க என கூறுகிறார். பிறகு பாரதி நல்லவங்க தான் எனக் கூற சிரிச்சுகிட்டே சொல்லுங்க என கேட்கிறார் ஹேமா. பிறகு பாரதியின் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியதும் எப்ப பாரு சமையல் அம்மா, சமையல் அம்மா இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என முடிவெடுக்கிறார்.

இந்த பக்கம் லட்சுமி கண்ணம்மாவுக்கு மாத்திரை கொடுத்து விட்டு பர்த் சர்டிபிகேட் பற்றி கேட்கிறார். அது எதுக்கு என கேட்க தேவி மிஸ் தான் கேட்டாங்க என லட்சுமி கூறுகிறார். அதெல்லாம் தரமுடியாது என கண்ணம்மா கூறிவிடுகிறார். நானே மிஸ்ஸிடம் பேசிக் கொள்கிறேன் என சொல்கிறார். பிறகு எங்க பிறந்தேன் என கேட்க கண்ணம்மா என் வைத்துள்ள தான் எனக்கு ஒரு அது எனக்கு தெரியாதா எந்த ஆஸ்பிடல்ல பிறந்தேன் என கேட்கிறார். அந்த ஆஸ்பிட்டல் இப்போ இல்லவே இல்லை இடிச்சி சூப்பர் மார்க்கெட் கட்டிட்டாங்க என கண்ணம்மா சொல்கிறார். எந்த ஊரில் பிறந்தேன் என கேட்க இந்த ஊர்லதான் என சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுகிறார். இந்த ஊர்லதான் பிறந்தேனா இதை வச்சு அப்பாவை கண்டுபிடிக்க முயற்சி செய்யணும் என லட்சுமி முடிவு செய்ய இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.


Bharathi Kannamma Serial Episode Update 14.03.22
jothika lakshu

Recent Posts

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

19 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

20 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

20 hours ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

3 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

3 days ago

Maragatha Malai – Trailer

Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc

3 days ago