வெண்பாவின் அம்மாவால் கடுப்பான பாரதி.. வெண்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போன வெண்பா அமெரிக்காவிலிருந்து வந்த நீங்க நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதானே.. சரி அப்படியே இல்லனாலும் பாரதியைப் பார்க்க போன நீங்க ஒரு ஹாய் ஹலோ நான் தான் என்னோட அம்மா ஷர்மிலானு சொல்லிட்டு வீட்டுக்கு டின்னர் சாப்பிட வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்னு சொல்ல வேண்டியது தானே என சொல்கிறார். இப்போ நான் பாரதி கிட்ட கல்யாணத்தை பத்தி பேசினது இல்ல என்ன தப்பு இருக்கு? நீதானே பத்து வருஷமா பாரதிய கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க.. பாரதி மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பது அவர் கொடுத்த ரியாக்சன்லயே தெரிஞ்சுகிட்டேன். எனக்கு பாரதிய கல்யாணம் பண்ணி வைக்கிறதுல விருப்பமே இல்லை. உனக்கு கொடுத்த ஒரு வருட கெடு இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் நான் காட்டுற மாப்பிள்ளையை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும் என்று சொல்கிறார். இப்ப எதுக்கு கல்யாணம் ஒரு ரெண்டு வருடம் போகட்டும் என வெண்பா சொல்ல ஷர்மிளா சத்தம் போட வெண்பா அமைதியாகிவிட்டார்.

சாந்தியிடம் எவ்வளவு வருசமா நீ வேலை பார்க்கிற பாரதி இவ்வளவு காதலிக்கிறானா இல்லையா எனக் கேட்க வெண்பா சொல்லாதே என சைகை காட்ட சாந்தி எனக்கு தெரியாது என கூறி விடுகிறார். மீண்டும் இந்த வருஷம் உனக்கு கல்யாணம் அது பாரதியா இருந்தால் சந்தோஷம். வேற யாராச்சும் இருந்தா அதை விட சந்தோஷம் என்று சொல்லி விட்டு உள்ளே செல்கிறார். ‌

இந்த பக்கம் கண்ணம்மா வெளியே சென்றதும் லட்சுமி நேற்று இரவு எங்க அம்மாகிட்ட என்ன பேசிட்டு இருந்த சொல்லு என கேட்கிறார். ஹேமா கல்யாணம் பற்றி பேசியதை சொல்ல பயப்படுகிறார். சொல்லு நான் கோவப்பட மாட்டேன் கல்யாணம் பத்தி பேசுனியா? எனக்கும் சம்மதம் தான். அன்னைக்கு நீ சொன்ன போது எனக்கு கோபம் வந்தது என அடிக்கணும் போல இருந்தது. வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்த்தேன் என்ன தப்புன்னு தோணுது. இதப்பத்தி டாக்டர் அப்பாகிட்ட பேசி நான் எங்க அம்மாவ சம்மதிக்க வைக்கிறேன் என லட்சுமி சொல்ல ஹேமா சந்தோஷப்படுகிறார்.

இந்த பக்கம் பாரதி மருத்துவமனையில் இதனால் வெண்பாவிற்கு தெரிந்து தான் நடக்குதா இல்ல வெண்பா போட்ட திட்டமா என புலம்புகிறார். இதற்கு இப்பவே ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என வெண்பாவுக்கு நாளைக்கு 11 மணிக்கு உன்னை பார்க்கணும் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் என்று மெசேஜ் செய்கிறார். மறுநாள் வெண்பாவும் பார்வதியைத் தேடி வருகிறார். உங்க அம்மா என்கிட்ட அப்படி பேசியது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. என்னைக்காவது உங்க கிட்ட உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று நம்பிக்கை கொடுக்கிற மாதிரி பேசி இருக்கேனா. உனக்கும் எனக்கும் என்ன இருக்கு என்பதை நீயே உன் அம்மாவிடம் போய் சொல்லு என கூறுகிறார்.

அத எங்க அம்மா உன்னை தேடி வந்து இருக்கும் போது நீ சொல்ல வேண்டியது தானே வெண்பா சொல்கிறார். ஆமா நான் வெண்பாவை காதலிக்கிறேன் விவாகரத்து ஆனதும் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்ல வேண்டியதுதானே என சொல்ல பாரதி அடிக்க பாய்கிறார் ‌‌ .

என்ன பாரதி உனக்கு ஒரு பிரச்சனை ஆறுதல் சொல்ல நான் வேணும், உங்க வீட்ல இருக்கவங்களை மிரட்ட நான் வேணும், உனக்கு ஒன்னுனா ஓடி வந்து நிற்க நான் வேணும் ஆனா உன்னுடைய வாழ்க்கைல நான் வரக்கூடாதா? கல்யாணம்னு சொல்லிட்டு கோவில் வரைக்கும் கூட்டிட்டு போய் தாலி கட்டும் நேரத்தில் நின்று போனது. அதே தாலி ஒரு கையால என் கழுத்தில் ஏறும்னு இதுவரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறேன் என வெண்பா சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Bharathi Kannamma Serial Episode Update 11.04.22
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

9 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

10 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

12 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

13 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

13 hours ago