bharathi kannamma 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா தன்னுடைய அம்மா பாக்யாவின் காலுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். பிறகு சேரில் உட்கார்ந்து இருக்கும் அவரை எழுந்து நிற்க சொல்லி அனைவரும் பிடித்து நிற்க வைக்கின்றனர். பிறகு ஒவ்வொருத்தராக கையை எடுக்க பாக்யா கொஞ்ச நேரம் தனியாக நிற்க அதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
பிறகு அங்கிருந்து மது மற்றும் கண்ணம்மா என இருவரும் ஸ்கூலுக்கு கிளம்புகின்றனர். மறுபக்கம் அஞ்சலியும் சௌந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்கும் போது சௌந்தர்யாவின் அண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாதத்தை எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் சௌந்தர்யா சந்தோஷப்படுகிறார். பிறகு பாரதி கீழே வர அவனுக்கும் பிரசாதத்தை கொடுத்து கோவிலுக்கு சென்று வர சொல்கிறார்.
இதனால் பாரதி மற்றும் விஜய் என இருவரும் கோவிலுக்கு வர அங்கு ஐயர் பாரதி குளத்தில் விட்ட மாலை ஒரு பெண் கழுத்துக்கு போன விஷயத்தை சொல்லி கூடிய சீக்கிரம் கல்யாணம் நடந்து முடிந்து விடும் என சொல்கிறார். மறுபக்கம் மது மற்றும் கண்ணம்மா நடந்து வரும்போது மது உங்க இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக சொல்ல கண்ணம்மா அப்படி எதுவும் கிடையாது பாரதி எனக்கு நல்ல பிரண்ட் மட்டும்தான் என சொல்கிறார்.
அடுத்ததாக பாரதி ஸ்கூலுக்கு வர அங்கு ஸ்கூலில் கண்ணம்மா மற்றும் மது என இருவரும் பேசிக்கொண்டு நடந்து வருகின்றனர்.
அப்போது மது சாயந்திரம் கடைவீதிக்கு போகலாம் வரியா என கேட்க கண்ணம்மா நான் கோவிலுக்கு போக போறேன் என சொல்கிறார். எதுக்காக என கேட்க அம்மாவுக்காகவும் சாந்தி அக்காவுக்கும் தான் என கண்ணம்மா சொல்ல மது மாலை கழுத்துக்கு வந்த விஷயத்தை சொல்ல இதைக் கேட்கும் பாரதி அந்த மாலை கண்ணம்மா கழுத்துக்கு தான் வந்ததா என தெரிந்து கொள்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…