ரோஜா மலரானது இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. இதன் இதழ் புண்களை ஆற்றும். உடல் பலம் தந்து இதயம், நரம்புமண்டலத்திற்கு நன்மை தருகிறது. தொண்டைநோய், சளி, இருமல், சுவாசநோய், நாவறட்சியைக் குணமாக்கும்.
ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரோஜாப் பூவினால் தயாரிக்கப்படும் ‘குல்கந்து’ மலச்சிக்கலுக்கு மிகச் சிறந்தது.
ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும்.
உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்றுவலி நீங்க இது உதவும். ரோஜா இதழில் தயாராகும் பன்னீர், மயக்கத்தையும், மனக்கவலையையும் போக்கும்.
ரோஜாப் பூவைக் கொண்டு தயார் செய்யப்படும் இனிய சுவையுள்ள சர்பத், ரத்த விருத்திக்கு பயனுள்ள ஒரு டானிக் ஆகும். இந்த ரோஜாப் பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும்.
ரோஜாவில் சர்க்கரை, துவர்ப்பு, வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. ரோஜா எண்ணெய் புண்களை ஆற்றும். காதுவலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்ணுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
ரோஜா இதழ்களை தேவையான அளவு சேகரித்து சம அளவு பாசிப்பயறு சேர்த்து நாலைந்து பூலாங்கிழங்கையும் உடன் வைத்து விழுதாக அரைத்து அதை உடல் முழுவதும் தேய்த்து சிறிதுநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தேய்த்துக் குளித்தால் உடல் கவர்ச்சிகரமான நிறம் பெரும். சரும நோய்கள் நீங்கும்.
ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும். ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…