benefits of jeera water
சீரகத் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
நாம் சமையலறையில் இருக்கும் பொருட்களில் ஒன்று சீரகம். இது ஆரோக்கியமான நன்மையையும் சுவையையும் கொடுக்கும். சீரக நீர் அஜீரண பிரச்சனையை போக்கவும் வயிற்று வலியையும் குணப்படுத்த முடியும்.
இது மட்டும் இல்லாமல் வயிற்று வலி, மலச்சிக்கல், சளி போன்ற கர்ப்ப காலத்தில் வரும் பிரச்சனைகளை போக்க சீரகம் பெருமளவில் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை போக்க சீரகம் உட்கொள்வது சிறந்தது. இருப்பினும் மருத்துவரை ஆலோசித்த பிறகு சாப்பிட்டால் உத்தமம்.
மேலும் சீரக விதைகளில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சீரகம் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சீராக நீர் மிகவும் சிறந்தது. மேலும் இன்சுலின் உற்பத்தியை தூண்டி சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
சீரகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து கட்டுப்பாடாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
தினமும் காலையில் சீரக நீர் குடித்து வந்தால் சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் தினமும் குடிக்கும்போது உடல் எடை குறையவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே மருத்துவ குணம் நிறைந்த சீரக நீரை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc