கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
கொய்யா பழத்தில் “லைக்கோபீனே, க்வெர்செடின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளருவதை தடுப்பதில் பேருதவி புரிகிறது. புற்று பாதிப்பு கொண்டவர்களும், புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்களும் கொய்யா பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
கொய்யா பழத்தில் “மெக்னீசியம்” தாது அதிகம் நிறைந்துள்ளது. இது உடலில் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஓய்வளிக்கும் ஆற்றலை கொண்டது.
கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. மேலும் இது மிக குறைந்தளவு “கிளைசீமிக்” குறியீட்டு அளவு கொண்ட ஒரு பழமாகும். இந்த கிளைசீமிக் குறியீட்டு அளவு மிக குறைந்த அளவில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட்டுட்டு வரும் போது அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரிப்பதை தடுக்கிறது. நீரிழவு நோயாளிகள் அவ்வப்போது கொய்யா பலம் சாப்பிடுவது நல்லது.
மூளையின் செல்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மையும் கொண்டது. கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மன அழுத்தம் ஏற்படாதவாறு தடுக்கலாம்.
தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…