Benefits of eating kale
கொள்ளு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் பயிறு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என அனைவருக்கும் தெரியும். அதில் குறிப்பாக கொள்ளு சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை குறித்து இதில் பார்க்கலாம்.
கொள்ளு சாப்பிட்டால் சிறுநீரகப் பிரச்சனை மாதவிடாய் பிரச்சனை வயிற்றுப் பிரச்சனை ஒவ்வாமை மூலநோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது.
பதப்படுத்தப்படாத கொள்ளை முளைக்கட்டி நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பை குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்கிறது.
இது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் இதில் பாஸ்பரஸ், இரும்பு அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் இருப்பதால் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.
குறிப்பாக சிறு நீரககல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.இதனை சாலட் மற்றும் சூப் செய்தும் சாப்பிடலாம்.
எனவே கொள்ளுவில் இருக்கும் நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…