Categories: Health

பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

எலுமிச்சைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி, நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மாதுளை: ரத்தத்தை சுத்திகரிப்பதில் இப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ரத்தத்தின் மோசமான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்தம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கும்பழமாகவும் உள்ளது. இதிலுள்ள ஆண்டிஆக்சிடண்ட்கள் சர்க்கரை நோயாளிகளை தொந்தரவு செய்வதில்லை.

பேரிக்காய்: பற்கள், எலும்புகள் பலப்படும். இதயம் வலுவாகும், இரைப்பை, குடல், சீரண உறுப்புகள் வலுப்பெறும்.

நாவல்பழம்: கல்லீரல் கோளாறு நீங்கும். குடல்புண்ணை அகற்றும். நீரிழிவுக்கு அருமருந்து.

கொய்யா:செரிமானத்துக்கேற்ற நார்ச்சத்தை கொண்டுள்ளது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பொதுவாக மலச்சிக்கலால் பாதிக்கப்படுவர். இப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன.

பேரீச்சம்பழம்: ரத்த விருத்தியாகும். சருமம் பளபளப்பாகும். கண் கோளாறுகள் வராது. இருமல், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.

சத்துக்குடி: பசியைத் தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத்திற்கு நல்லது. கர்ப்பப்பையை பலமாக்கும்.

பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து, நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

சீதாப்பழம்: மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும். பேன், பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். குளிர்காய்ச்சல் நீங்கும். இதயம் பலப்படும்.

ஆரஞ்சு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வாழ்நாளில் இளமைக்காலத்தை நீட்டிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும், பல் சொத்தை வராது.

admin

Recent Posts

கருப்பட்டி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

5 hours ago

நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் மாதவி, சூர்யா கொடுத்த ஷாக், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

விஜய் சேதுபதியிடம் கம்ப்ளைன்ட் பண்ண வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

8 hours ago

பைசன்: 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

10 hours ago

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…

10 hours ago

விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, போட்டியாளர்களின் பதில் என்ன? வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

10 hours ago