வெந்தயக் கீரை உண்பதால் மலடு, சூதகக்கட்டு நீங்கும். வாய்ப்புண், வாய் நாற்றம் போகும். குமட்டல் நீங்கும். சீரணம் சரியாகும். மலக்கட்டு நீங்கும். புளி ஏப்பம் போகும். குடற்சூட்டைத் தணிக்கும். மூலப் புண் ஆறும்.
வெந்தயக் கீரையை அவித்து துவரம் பருப்பு தேங்காய், காரம் உப்பு சேர்த்து சோற்றில் கலந்து சாப்பிடலாம். வயிற்றுச் சூடு, வாய் துர்நாற்றம் நீங்கும். வியர்வை துர்நாற்றம் வயிற்றுப் பூச்சி ஒழியும். மாத விலக்கின்போது உடல் களைப்பு தீரும்.
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.
வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju
பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…
1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…