bahubali 3 to be made on mega budget - plan to release in OTT
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதனை திரைப்படமாக எடுக்க அதிக வருடங்கள் பிடிக்கும் என்பதால் குறுகிய காலத்தில் படமாக்கி ஓ.டி.டி.யில் வெளியிடுகிறார்கள். பாகுபலி 3-ம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் பாகுபலி 3-ம் பாகத்தை தொடங்க உள்ளாராம்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…