baakiylakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா கோபியிடம் நான் தற்கொலை செய்து கொள்வேன் உங்க எல்லார் பேரையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி கீழ போய் ராதிகா இனிமே இங்கதான் இருப்பானு சொல்லிட்டு வாங்க என மிரட்டி அனுப்புகிறார்.
கீழே வரும் கோபி எதுவும் பேசாமல் இருக்க அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க கீழே இறங்கி வரும் ராதிகா சொல்லுங்க கோபி ராதிகா இங்க தான் இருப்பான்னு சொல்லுங்கனு என வாக்குவாதத்தில் ஈடுபட யாரும் எதுவும் பேச வேண்டாம் ராதிகா இங்கே தான் இருப்பா நானும் அவளும் இதே வீட்ல தான் இருக்க போறோம் என கோபி அதிர்ச்சி கொடுக்கிறார்.
பாக்கியா எந்த உரிமையில நீங்க இந்த வீட்ல இருக்க போறீங்க இந்த வீட்டுக்கு நான் கொஞ்சம் கொஞ்சமா பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னும் உங்களுக்கு 18 லட்சம் ரூபாய் தான் தரணும். எந்த ஹவுஸ் ஓனர் ஆவது வித்திட்ட வீட்ல நானும் இங்க தான் இருப்பேன்னு வந்து பொண்டாட்டியோட நிப்பாங்களா? என கேட்க ராதிகா நான் இந்த வீட்ல தான் இருப்பேன் என உறுதியாக கூறுகிறார். கோபி இன்னும் மொத்த பணமும் கொடுக்கலல்ல கொடுத்ததும் போறோம் என சொல்ல செழியன் இப்பவே பணம் கொடுக்கிறோம் கிளம்புங்க என சொல்ல ராதிகா போக முடியாது என கூறுகிறார்.
பிறகு நீங்க மேல வாங்க கோபி என ராதிகா கோபியை இழுத்துச் செல்ல பாக்கியா ஈஸ்வரியிடம் இப்ப நான் என்ன பண்ணட்டும் அத்தை என கேட்க ஈஸ்வரி எதுவும் புரியாமல் நிற்கிறார்.
கோபி மேல பரிதாபப்பட்டது தப்பா போச்சு என ஈஸ்வரி வருத்தப்பட பாக்யா இப்ப வரைக்கும் நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லவே இல்லை என கேட்கிறார். நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என சொல்ல எல்லோரும் நீ இங்க தான் இருக்கணும் என பாக்கியாவிடம் பேசுகின்றனர்.
பாக்கியா அது எப்படி முடியும் ஒவ்வொரு நாளும் ராதிகா முகத்தை பார்த்துகிட்டு இந்த வீட்ல இருக்க முடியாது என சொல்ல ஈஸ்வரி நாங்க சாகுற வரைக்கும் நீ தான் எங்களுடைய மருமகள், நீ இந்த வீட்டை விட்டு போகுறதை பற்றி யோசிக்க கூடாது, இது என் மேல சத்தியம் என சத்தியம் வாங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…