ஈஸ்வரி எடுத்த முடிவு. பாக்யாவுக்கு வந்த சந்தேகம். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி கோபியுடன் வந்து நிற்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்‌.

பிறகு எழில் சத்தம் போட ஈஸ்வரி யாரும் எதுவும் பேசக்கூடாது கோபி உடம்பு சரி ஆகுற வரைக்கும் இங்க தான் இருப்பான் என இனிய மற்றும் செழியனை ரூமுக்கு கூட்டிப் போக சொல்ல எழில் அப்படின்னா அம்மாவும் இனியாவும் ஹால்ல வந்து படுத்துப்பாங்களா என்று கேள்வி கேட்க யாரும் யாருடைய ரூமையும் விட்டுக் கொடுக்க வேண்டாம் கோபி என்னுடைய ரூம்ல இருக்கட்டும் என ரூமுக்கு என கூட்டிப் போகச் சொல்ல இருவரும் கூட்டிச் செல்கின்றனர்.

பிறகு ரூமுக்கு வரும் ஈஸ்வரி நீ இங்கதான் இருக்கணும், நீ திரும்பவும் அந்த வீட்டுக்கு போனின்னா உன்னை நினைத்து வருத்தப்பட்டு எனக்கு ஏதாச்சு ஆகிடும் என்று சொல்ல கோபி அப்படியெல்லாம் பேசாதீங்க அம்மா நான் இங்கேயே இருக்கேன் என ஒப்புக் கொள்கிறார்.

இங்கே பாக்கியா வீட்டை விட்டு கிளம்புறேன் என்று கிளம்ப ராமமூர்த்தி நீங்க இந்த வீட்டை விட்டு போகக்கூடாது கோபிக்கு உடம்பு சரி ஆனதும் நானே கூட்டிட்டு போய் விட்டேன் என தன்னுடைய தலையில் அடித்து சத்தியம் வாங்குகிறார்.

மறுபக்கம் ராதிகாவின் அம்மா மயூவிடம் கோபி வீட்டை விட்டு பல விஷயத்தை சொல்ல ராதிகா கோபப்படுகிறார். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல ராதிகா நான் எங்கேயும் வரமாட்டேன் விருப்பமில்லாதவரை இழுத்து பிடித்து கூட்டிட்டு வர வேண்டாம் என சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார்.

இங்கே வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மாலினி வீட்டுக்கு வர செழியன் அதிர்ச்சி அடைகிறார். மாலினி செழியன் இடம் பேசுவதை எல்லாம் பார்த்து செல்வி என்னக்கா இந்த பொண்ணு அடிக்கடி வீட்டுக்கு வருது ஏதோ தப்பா இருக்கே என்று சொல்ல பாக்கியாவும் எனக்கும் அப்படித்தான் தோணுது என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-today-episode-update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

2 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

2 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

2 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

2 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

2 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

2 days ago